/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.85,000 கோடியில் சீன கார் ஆலை தெலுங்கானாவில் அமைகிறது
/
ரூ.85,000 கோடியில் சீன கார் ஆலை தெலுங்கானாவில் அமைகிறது
ரூ.85,000 கோடியில் சீன கார் ஆலை தெலுங்கானாவில் அமைகிறது
ரூ.85,000 கோடியில் சீன கார் ஆலை தெலுங்கானாவில் அமைகிறது
ADDED : மார் 29, 2025 10:45 PM

ஹைதராபாத்:பி.ஒய்.டி., நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் கார் தொழிற்சாலையை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாதில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில், 85,000 கோடி ரூபாய் மதிப்பில், 500 ஏக்கர் பரப்பளவில் ஆலை அமைய இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதற்காக மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலையில், கார் உற்பத்தி மட்டுமின்றி, பி.ஒய்.டி.,யின் விசேஷ பிளேட் பேட்டரியை தயாரிக்க தனியாக 20 ஜி.வாட்., ஆலையும் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேற்கத்திய நாடுகளில், குறைந்த விலையில் சீன கார்கள் கிடைப்பதால், பல நாடுகள் வரி விதித்துள்ளன. ஐரோப்பிய யூனியன், கடந்த செப்டம்பரில் இருந்து, 35.30 சதவீதம் அளவுக்கு வரி விதித்துள்ளது. அமெரிக்காவில், 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வாகன நிறுவனங்களை பாதுகாக்க, மேற்கத்திய நாடுகளில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், தற்போது இந்திய சந்தைக்கு குறிவைத்துள்ளது, பி.ஒய்.டி., நிறுவனம்.
உலக அளவில் மின்சார கார்களுக்கான தேவை குறைந்தாலும், இந்தியாவில் மின்சார கார் சந்தை 43 சதவீதம் ஆண்டு வளர்ச்சியில் உள்ளது. 2030க்குள், 9.32 லட்சம் மின்சார கார்கள் விற்பனை ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.