/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இந்த வாரம் புதிய பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள்
/
இந்த வாரம் புதிய பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள்
ADDED : பிப் 10, 2025 12:47 AM

அஜாக்ஸ் இன்ஜினியரிங்
கர்நாடகாவின் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட 'அஜாக்ஸ் இன்ஜினியரிங்' நிறுவனம், ரெடி மிக்ஸ் கான்கிரீட் உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பங்குதாரர்களின் 2.01 கோடி பங்குகளை விற்பதன் வாயிலாக, 1,269 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான பங்கு விற்பனை இன்று துவங்கி, வருகிற 12ம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை 599 முதல் 629 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தின் பங்குகள் 17ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்
மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட 'ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்', நிதி, உடல் ஆரோக்கியம் மற்றும் காப்பீடு உட்பட ஆறு முக்கிய துறைகளுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளித்து வருகிறது. இந்நிறுவனம் பங்குதாரர்களின் 12.36 கோடி பங்குகளை விற்பதன் வாயிலாக, 8,750 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. இதற்கான பங்குகள் விற்பனை வருகிற 12 முதல்- 14ம் தேதி வரை நடைபெறுகிறது. பங்கு ஒன்றின் விலையாக 674 முதல் 708 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் 19ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.
குவாலிட்டி பவர்
மஹாராஷ்டிராவின் சாங்கிலியை தலைமையிடமாகக் கொண்ட 'குவாலிட்டி பவர்' நிறுவனம், உயர் மின்னழுத்த சாதனங்கள் மற்றும் மின்சார உபகரணங்களுக்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 225 கோடி ரூபாய் திரட்ட உள்ளது-. இதற்கான பங்கு விற்பனை வருகிற 14ம் தேதி துவங்கி, 18ம் தேதி முடிவடைகிறது. இதற்கான பங்கு விலை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிறுவனத்தின் பங்குகள் 21ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

