/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிறுவன என்.சி.டி., உச்சவரம்பு உயர்த்த 'செபி' திட்டம்
/
நிறுவன என்.சி.டி., உச்சவரம்பு உயர்த்த 'செபி' திட்டம்
நிறுவன என்.சி.டி., உச்சவரம்பு உயர்த்த 'செபி' திட்டம்
நிறுவன என்.சி.டி., உச்சவரம்பு உயர்த்த 'செபி' திட்டம்
ADDED : நவ 01, 2024 10:32 PM

புதுடில்லி:எச்.வி.டி.எல்.இ., எனும், உயர் மதிப்பு கடன் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை அடையாளம் காண்பதற்கான வரம்பை, 500 கோடியில் இருந்து 1,000 கோடி ரூபாயாக உயர்த்த, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, நிறுவனங்களின் சுமைகளை எளிதாக்குவதையும், கடன் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் ஆளுகை நெறிமுறைகளை மேம்படுத்தவும் உதவும் எனத் தெரிகிறது. இதற்கான, முன்மொழிவுகள் மீது நவம்பர் 15ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.
தற்போது, 500 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள என்.சி.டி., எனும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திர நிலுவையைக் கொண்ட எந்தவொரு நிறுவனமும், எச்.வி.டி.எல்.இ., என வகைப்படுத்தப்பட்டுஉள்ளது.
மேலும் 2013ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், நிறுவனங்களாக வகைப்படுத்தப்படாத எச்.வி.டி.எல்.இ.,க்களுக்கான சில தளர்வுகளும் செபியின் இந்த திட்டத்தில் அடங்கும். வரம்பை அதிகரிப்பதற்கான மாற்றம், முதலீட்டாளர் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் செபி தெரிவித்துள்ளது.

