தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ சந்தையில் தொடரும் ஊசலாட்டம்

சந்தையில் தொடரும் ஊசலாட்டம்

சந்தையில் தொடரும் ஊசலாட்டம்


ADDED : அக் 10, 2024 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. பணவீக்கம் தொடர்பான கவலைகள் நீடிப்பதால், குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாக மாற்றமின்றி தொடர்கிறது என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்

• வர்த்தகத்தின் ஆரம்பத்தில் சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, நேற்றைய வர்த்தக நேரத்தின்போது, நிப்டி 0.88 சதவீதம் அதிகரித்து, 25,234 புள்ளிகள்; சென்செக்ஸ் 0.83 சதவீதம் அதிகரித்து 82,139.21 புள்ளிகள் வரை உயர்வு

கண்டன. பிற்பகல் வர்த்தகத்தின்போது, ஊசலாட்டம் நீடித்த நிலையில், கடைசி நேரத்தில் முதலீட்டாளர்கள் திடீரென பங்குகளை விற்கத் துவங்கியதால், சரிவுடன் நிறைவு செய்தன

• நிப்டி குறியீட்டில், விரைவில் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன. ரியல் எஸ்டேட், பார்மா துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று, ------4,563 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.87 சதவீதம் அதிகரித்து, 77.85 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா அதிகரித்து, 83.96 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 சிப்லா

 டிரென்ட்

 டாடா மோட்டார்ஸ்

 எஸ்.பி.ஐ.,

 டெக் மஹிந்திரா

அதிக இறக்கம் கண்டவை

 ஐ.டி.சி.,

 நெஸ்லே இந்தியா

 ஓ.என்.ஜி.சி.,

 ரிலையன்ஸ்

 ஹிந்துஸ்தான் யுனிலீவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us