/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பசு சார்ந்த பொருளாதார கண்காட்சி ஜெய்ப்பூரில் செப்., 4 - 7ல் நடக்கிறது
/
பசு சார்ந்த பொருளாதார கண்காட்சி ஜெய்ப்பூரில் செப்., 4 - 7ல் நடக்கிறது
பசு சார்ந்த பொருளாதார கண்காட்சி ஜெய்ப்பூரில் செப்., 4 - 7ல் நடக்கிறது
பசு சார்ந்த பொருளாதார கண்காட்சி ஜெய்ப்பூரில் செப்., 4 - 7ல் நடக்கிறது
ADDED : ஆக 27, 2025 01:21 AM

புதுடில்லி:பசுக்கள் சார்ந்த பொருளாதார மேம்பாடு தொடர்பான மாநாடு, ஜெய்ப்பூரில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
'கவ் மஹாகும்ப் 2025' என்ற பெயரில் செப்., 4 முதல் 7ம் தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது. 'தேவ்ரஹா பாபா கவ் சேவா பரிவார்' என்ற அமைப்பு, இந்த மாநாடு மற்றும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பசு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள், பசுவிடம் இருந்து பெறப்படும் பால் மற்றும் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் பால் பொருட்கள், பசுஞ்சாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பொருளாதார நிலை உள்ளிட்டவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
ஆந்திராவின் மலைப்பிரதேசங்களை சேர்ந்த புங்கனுார் பசு உள்ளிட்ட 13 நாட்டு இன பசுக்கள் இதில் காட்சிக்கு இடம்பெற உள்ளன. பால் பொருட்கள், பால் பண்ணைக்கு தேவையான இயந்திரங்கள் உள்ளிட்டவையும் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 தொழில்முனைவோர் இந்த மாநாட்டில் பங்கேற்று, தங்கள் பால் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்த உள்ளனர்.
பசு வளர்ப்பு சார்ந்த தொழிலில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முன் முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வை பசு வளர்ப்போரிடம் ஏற்படுத்துவது, அவர்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகியவையும் இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.