/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டிசம்பர் ஜி.எஸ்.டி., வசூல் 6 சதவீதம் வளர்ச்சி
/
டிசம்பர் ஜி.எஸ்.டி., வசூல் 6 சதவீதம் வளர்ச்சி
ADDED : ஜன 02, 2026 01:03 AM

புதுடில்லி: கடந்த டிசம்பர் மாத ஜி.எஸ்.டி., வசூல், ஆறு சதவீதம் அதிகரித்து 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 டிசம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஜி.எஸ்.டி., குறைப் பை தொடர்ந்து, உள்நாட்டு விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாயின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் ஜி.எஸ்.டி., வசூல் வளர்ச்சியும் சரிந்துள்ளது.
கடந்த மாதம் ரீபண்டு வழங்குவது 31 சதவீதம் அதிகரித்து 28,980 கோடி ரூபாயாக இருந்தது. இதை கழித்தது போக, நிகர ஜி.எஸ்.டி., வசூல் 1.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதனிடையே, தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வசூல் மூன்று சதவீதம் சரிந்து 3,598 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது 2024 டிசம்பரில் 3,707 கோடி ரூபாயாக இருந்தது.

