/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'சர்க்கரை விலை இனிக்கவில்லை' கிலோ ரூ.39 ஆக உயர்த்த கோரிக்கை
/
'சர்க்கரை விலை இனிக்கவில்லை' கிலோ ரூ.39 ஆக உயர்த்த கோரிக்கை
'சர்க்கரை விலை இனிக்கவில்லை' கிலோ ரூ.39 ஆக உயர்த்த கோரிக்கை
'சர்க்கரை விலை இனிக்கவில்லை' கிலோ ரூ.39 ஆக உயர்த்த கோரிக்கை
ADDED : அக் 30, 2024 08:38 PM

புதுடில்லி:சர்க்கரை ஆலைகள் சந்தித்து வரும் இழப்பை சரிகட்ட, சர்க்கரை விலையை கிலோ 31 ரூபாயில் இருந்து 39 ரூபாய் 14 காசாக அதிகரிக்குமாறு, இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கமான 'இஸ்மா' வலியுறுத்திஉள்ளது.
இதுதொடர்பாக 'இஸ்மா' வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை, ஒரு கிலோ 31 ரூபாயாக நீடிக்கிறது. இதே காலகட்டத்தில், கரும்புக்கான விலை ஐந்து முறை உயர்த்தப்பட்டு விட்டது. 2024-25ம் ஆண்டுக்கான கரும்பு விலை குவின்டாலுக்கு 340 ரூபாயாக உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டின் சர்க்கரை விலை கட்டுப்பாட்டு உத்தரவின்படி, கரும்புக்கான ஆதரவு விலை மாற்றத்தோடு, சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை தொடர்புடையதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிகரிக்கும் உற்பத்தி செலவை பிரதிபலிப்பதாக சர்க்கரை விலை இல்லை.
கிலோவுக்கு 39.14 ரூபாயாக விலையை உயர்த்தினால் தான், கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சர்க்கரை ஆலைகள் பணம் செலுத்த இயலும். உற்பத்தி விலைக்கு மிகவும் குறைவாக, விற்பனை விலை நீடிப்பதால், நிலுவைத் தொகை சேர்ந்து கிராமப்புற பொருளாதாரத்தை பாதித்து வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*சர்க்கரை உற்பத்திக்கு கிலோவுக்கு ரூ.41.66 செலவாகிறது
*சில்லரை விற்பனைக்கு முன்பாக, அதன் விலை ரூ.36.50 ஆக உள்ளது
*குறைந்தபட்ச விற்பனை விலையை ரூ.39.14 ஆக உயர்த்த கோரிக்கை