sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பொய் செய்தி பரப்பும் வங்கதேச ஊடகம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

/

பொய் செய்தி பரப்பும் வங்கதேச ஊடகம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

பொய் செய்தி பரப்பும் வங்கதேச ஊடகம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

பொய் செய்தி பரப்பும் வங்கதேச ஊடகம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

4


ADDED : டிச 21, 2025 03:46 PM

Google News

ADDED : டிச 21, 2025 03:46 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு அமைதியாக நடந்த போராட்டம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிடுகின்றன, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த ஆண்டு இடஒதுக்கீடுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பங்கெடுத்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி அதன் பின் முக்கிய மாணவர் தலைவராக அறியப்பட்டார். இவர் இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் - இளைஞர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சி போன்றவற்றுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஷெரீப் ஓஸ்மான் சுடப்பட்டார். இதில் தலையில் காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி 18ம் தேதி இறந்தார். இந்த செய்தி பரவியதும், வங்கதேச தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் நேற்று முன்தினம் கலவரம் மூண்டது. இதனை பயன்படுத்தி திபு சந்திர தாஸ் என்ற ஹிந்துத் தொழிலாளியை ஒரு கும்பல் கடுமையாக தாக்கி கொன்றது. பிறகு மரத்தில் கட்டி வைத்து தொங்கவிட்டு எரித்ததுடன் தேசிய நெடுஞ்சாலையில் போட்டு மீண்டும் தீவைத்தனர்.

இதனை கண்டித்து டில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் குறித்து வங்கதேசம் ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த போராட்டம் குறித்து வங்கதேச ஊடகங்கள் தவறான தகவலை பரப்புகின்றன. டில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் மொத்தம் 20 - 25 இளைஞர்கள் தான் கூடினர். அவர்கள் திபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் போட்டனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அங்கு வேலியை தாண்டியாரும் செல்ல முயற்சிக்கவில்லை. பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. போலீசார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்திவிட்டனர்.

வியன்னா ஒப்பந்தப்படி, தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வங்கதேச அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பில் உள்ளதுடன், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம். திபு சந்திர தாசை கொடூரமாக கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us