sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா?: யாரும் சொல்லவில்லை என்கிறார் சசி தரூர்

/

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா?: யாரும் சொல்லவில்லை என்கிறார் சசி தரூர்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா?: யாரும் சொல்லவில்லை என்கிறார் சசி தரூர்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா?: யாரும் சொல்லவில்லை என்கிறார் சசி தரூர்

2


ADDED : பிப் 09, 2026 10:22 PM

Google News

2

ADDED : பிப் 09, 2026 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து யாரும் என்னிடம் விவாதிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி இன்னும் வெளியே வராமல் இருக்கும் புத்தகம் குறித்து லோக்சபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் பேச முயன்றார். இதற்கு மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகரும் கண்டிப்பு காட்டினார். இதற்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எட்டு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ராகுல் பேச அனுமதிக்கப்படவில்லை எனக்கூறி, எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக லோக்சபா கடந்த நான்கு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி பிரியங்கா விமர்சனம் செய்துபேட்டி கொடுத்து இருந்தார்

இந்நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான கடிதத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கையெழுத்து போட்டு உள்ளனர். மேலும் இந்த தீர்மானத்திற்கு திமுக மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தேவையான எம்பிக்களின் ஆதரவு உள்ளது. ஓரிரு கட்சிகள் ஆதரவு தராவிட்டாலும், அரசியலமைப்பு விதிகளின்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தன.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியதாவது: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக யாரும் என்னிடம் விவாதிக்கவில்லை. அது போன்ற நோக்கம் உள்ளதாக அறிகிறேன். ஆனால், அதற்கான வழிமுறைகள் உள்ளது. அது முறையாக பதிவு செய்யும் வரை அது செய்தி கிடையாது. தற்போதைய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சிலர் விவாதித்து விவாதித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us