/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உலக சந்தைகளின் போக்கால் தடுமாற்றம்
/
உலக சந்தைகளின் போக்கால் தடுமாற்றம்
ADDED : அக் 02, 2024 12:21 AM

• வாரத்தின் இரண்டாவது நாளான நேற்றும், பங்குச் சந்தை குறியீடுகள் சிறிய சரிவுடன் நிறைவடைந்தன. வர்த்தக நேர முடிவில், நிப்டி 14 புள்ளிகளும், சென்செக்ஸ் 33 புள்ளிகளும் குறைந்தன
• உலக சந்தைகளில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள், அன்னிய முதலீடு வெளியேற்றம் போன்றவை, இந்திய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. மூன்றாவது வர்த்தக நாளாக நிப்டி, சென்செக்ஸ் சரிவு கண்டன
• நேற்று வர்த்தகத்தின் ஆரம்பத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. ஆனால், பிற்பகல் வர்த்தகத்தின்போது முதலீட்டாளர்கள், அதை தக்கவைக்க ஆர்வம் காட்டவில்லை. எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் பொருட்கள் சார்ந்த பங்குகள் விலை கணிசமான அளவு குறைந்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ------5,579 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று-------இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.66 சதவீதம் சரிந்து, 70.51 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து, 83.82 ரூபாயாக இருந்தது.