/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூபாய் மதிப்பு சரிவால் சிக்கலாகும் டாலர் இலக்குகள்
/
ரூபாய் மதிப்பு சரிவால் சிக்கலாகும் டாலர் இலக்குகள்
ரூபாய் மதிப்பு சரிவால் சிக்கலாகும் டாலர் இலக்குகள்
ரூபாய் மதிப்பு சரிவால் சிக்கலாகும் டாலர் இலக்குகள்
ADDED : டிச 09, 2024 12:29 AM

இந்திய ரூபாயின் போக்கு காரணமாக அமெரிக்க டாலர் சார்ந்த நிதி இலக்குகளை அடைவது மேலும் சிக்கலாகியுள்ளதை சமாளிக்கும் வழிகள்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மையில் புதிய இறக்கத்தை சந்தித்தது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 84 எனும் அளவில் உள்ளது. இந்திய ரூபாயின் போக்கு பலவீனமாக இருந்தாலும், ஆண்டு அடிப்படையில் நோக்கினால், ரூபாய் மதிப்பு 1.3 சதவீதம் சரிந்துள்ளது.
எனினும், ஐந்தாண்டு கால அடிப்படையில் இந்த சரிவு 3.3 சதவீதமாகவும், பத்தாண்டு கால அடிப்படையில் 3.1 சதவீதமாகவும் இருக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது பொருளாதார நோக்கில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக டாலர் சார்ந்த பல்வேறு நிதி இலக்குகளை பாதிக்கக் கூடியது.
முக்கிய காரணங்கள்
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவிற்கான முக்கிய காரணம், முன்னணி சர்வதேச நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் பொதுவாக வலுப்பெற்று வருவதுதான். இந்த போக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதால் தீவிரமாகி இருக்கிறது.
இதற்கு முன் டிரம்ப் அதிபராக இருந்தபோது, அமெரிக்க வர்த்தகங்களுக்கு ஆதரவாக அவரது அரசு கொள்கை முடிவுகள் அமைந்திருந்ததை முதலீட்டாளர்கள் நினைவில் கொண்டுள்ளனர். அதேபோலவே, அவரது இரண்டாவது பதவிக் காலத்திலும் அமெரிக்க வர்த்தகங்களுக்கு ஆதரவான நிலை தீவிரமாகும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும் அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது அவர் அதிக வரி விதிக்கலாம் எனும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதுவும் டாலருக்கு முக்கிய ஆதரவாக அமைந்துள்ளது. அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடும் டாலருக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.
நிதி இலக்குகள்
அண்மையில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வர்த்தக நிதி நிலை முடிவுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இதனிடையே, இந்திய பங்குச்சந்தையில் இருந்து நிதி விலக்கப்படுவதும் தாக்கம் செலுத்துகிறது.
டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைவது நீண்டகால போக்காகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிக உற்பத்தித் திறன், குறைந்த வர்த்தக பற்றாக்குறை, குறைவான பணவீக்கம் கொண்ட நாடுகள் வலுவான நாணயத்தை பெற்றுள்ளன.
இந்தியாவின் பணவீக்க அளவு மற்றும் அமெரிக்க பணவீக்க அளவிற்கு ஏற்பவே ரூபாயின் மதிப்பின் போக்கும் அமையும். டாலரின் வலுவான தன்மை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார தாக்கம் தவிர, டாலர் சார்ந்த அனைத்து சேவைகளையும் மேலும் செலவு மிக்கதாக்கும்.
இதனால், அமெரிக்க உயர்கல்வி, வெளிநாட்டு சுற்றுலா பயணம், வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கான நிதி உதவி உள்ளிட்ட டாலர் சார்ந்த இலக்குகள் அனைத்தும் கடினமாகும்.
அதேபோல, தங்கம் போன்ற பண்டகங்களில் விலையும் அதிகரிக்கும். உயர்கல்வி உள்ளிட்ட டாலர் நிதி இலக்குகள் சிக்கலாவதை சமாளிக்கும் வழிகளை அறிந்திருப்பது அவசியம். பங்கு முதலீட்டில் ஈடுபடுபவர்கள், அமெரிக்க பங்குகள் சார்ந்த நிதிகளில் முதலீடு செய்யலாம்.
ரூபாயின் மதிப்பு சரியும்போது, ரூபாய் மதிப்பில் தங்கத்தின் மதிப்பு உயர்வதும் கைகொடுக்கும். எனினும், முதலீடு தொகுப்பில் தங்கத்தின் அளவில் கவனமாக இருக்க வேண்டும்.