/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
உள்நாட்டு முதலீட்டாளர்களால் ஏற்றம்
/
உள்நாட்டு முதலீட்டாளர்களால் ஏற்றம்
ADDED : நவ 29, 2024 11:31 PM

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்கு சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் 1 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டன. வாராந்திர அடிப்படையில், சந்தை குறியீடுகள் இரண்டாவது வாரமாக உயர்வுடன் நிறைவடைந்தன.
• நேற்று வர்த்தக துவக்கத்தில் சந்தை குறியீடுகள் உயர்ந்தன. அன்னிய முதலீடுகளின் தொடர் வெளியேற்றத்தால், கடந்த மூன்று வாரங்களாக கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் பங்குகளை வாங்க, உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை அதிக ஏற்றம் கண்டது.
• நிப்டி குறியீட்டில் ஐ.டி., வாகனத் துறை தவிர, அனைத்து துறை பங்குகள் விலையும் உயர்ந்தன. குறிப்பாக, ஊடகம், பொதுத் துறை வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த பங்குகள் 4 சதவீத உயர்வு கண்டன. எனர்ஜி, உலோகம் மற்றும் வங்கி துறை பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தன.
• மும்பை பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள 4,050 நிறுவ னங்களில், 2,347 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும்; 1,606 நிறுவ னங்களின் பங்குகள் குறைந்தும்; 97 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று--- --4,384 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.30 சதவீதம் குறைந்து, 73.06 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா சரிந்து, இதுவரை இல்லாத வகையில் 84.60 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
பார்தி ஏர்டெல்
சன் பார்மா
சிப்லா
மஹிந்திரா & மஹிந்திரா
டாடா கன்ஸ்யூமர்
அதிக இறக்கம் கண்டவை
பவர்கிரிட்
ஸ்ரீராம் பைனான்ஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
எச்.டி.எப்.சி., லைப்
நெஸ்லே