/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டாக்டர் அகர்வால்ஸ் பங்கு விலை ரூ.382 - 402 ஆக நிர்ணயம்
/
டாக்டர் அகர்வால்ஸ் பங்கு விலை ரூ.382 - 402 ஆக நிர்ணயம்
டாக்டர் அகர்வால்ஸ் பங்கு விலை ரூ.382 - 402 ஆக நிர்ணயம்
டாக்டர் அகர்வால்ஸ் பங்கு விலை ரூ.382 - 402 ஆக நிர்ணயம்
ADDED : ஜன 26, 2025 01:04 AM

சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும், 29ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து, சென்னையில், டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் நிறுவன தலைவர் அமர் அகர்வால் கூறியதாவது:கண் பராமரிப்பு சேவை துறையில், அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டாக, டாக்டர் அகர்வால் ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் உள்ளது. கண்புரை, ஒளிவிலகல், பிற அறுவை சிகிச்சைகள், கண் கண்ணாடிகள், கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளிட்ட கண் தொடர்பான மருத்துவ பொருட்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்தியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், 209 மருத்துவமனைகளை இது கொண்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கண் பராமரிப்பு சேவை நிறுவனமாகவும் உள்ளது.தற்போது, இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. வரும், 29ம் தேதி துவங்கி, 31ம் தேதிக்குள் பங்கு வெளியீடு முடிவடையும்.
ஒரு பங்கின் விலை, 382முதல் 402 ரூபாய்.இதில், 35 சதவீத பங்கிற்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 15.79 லட்சம்  பங்குகள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. பங்குதாரர்களுக்கான ஒதுக்கீடு 11.29 பங்குகள் என்ற அளவை கொண்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

