/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இ.பி.எம்., பாப்ஸ்ட் ரூ.340 கோடி முதலீடு
/
இ.பி.எம்., பாப்ஸ்ட் ரூ.340 கோடி முதலீடு
ADDED : ஏப் 04, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இ.பி.எம்., பாப்ஸ்ட் நிறுவனம், மின் விசிறிகள், மோட்டார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்னை அருகில், 14.20 ஏக்கரில், 340 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதன் வாயிலாக, 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஆலையை, அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இதற்கு இரு ஆலைகளும், உலகளாவிய தொழில்நுட்ப மையம் ஒன்றும் உள்ளது.

