
'ஜங்க் புட்' விளம்பரம் வேண்டாம்
'ஜ ங்க் புட்' எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களில் சர்க்கரை, கொழுப்பு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, பிரிட்டன், நார்வே, சிலி ஆகிய நாடுகளில் ஜங்க் புட் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.
இரவு 9 மணிக்கு மேல்தான் சோ ஷி யல் மீடியா மற்றும் 'டிவி'க்களில் விளம்பரங்கள் வெளியாகின்றன. அதேபோல் இந்தியாவிலும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் வாயிலாக கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும்.
வளர்ச்சி, சவாலில் விவசாயம்
வே ளாண் துறை வளர்ச்சி கண்டாலும், காலநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்தியாவின் வேளாண் வளர்ச்சி, 4.40 சதவீதமாக உள்ளது. ஆனால், தானியங்கள், மக்காச்சோளம், சோயா, பயறு வகை உற்பத்தியில் உலக சராசரியைவிட பின்தங்கியுள்ளது.
மொத்த பாசன பரப்பு 2001- - 02ல், 47.10 சயதவீதமாக இருந்த நிலையில், 2022- - 23ல், 55.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு பி.எம்., கிசான் திட்டத்தில், 4.09 லட்சம் கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் விவசாய இயக்கம் மற்றும் 'இ-நாம்' வாயிலாக, 1.79 கோடி விவசாயிகள், 2.72 கோடி வர்த்தகர்கள் சந்தையோடு இணைந்துள்ளனர்.
குறைந்தது அன்னிய முதலீடு
நா ட்டின் அன்னிய நேரடி முதலீடு நடப்பு நிதியாண்டில் அதன் உண்மையான திறனை வெளிப்படுத்தவில்லை. முதலீடுகள் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த 10, 20 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் லாபத்தை திரும்ப பெற்றதும், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதும் இதற்கு காரணங்கள்.
யூரியா விலையை உயர்த்த லாம்
யூ ரியா பயன்பாட்டை கட்டுப்படுத்த, அதன் சில்லரை விலையை ஓரளவுக்கு உயர்த்தி விட்டு, அதற்கு இணையாக பயிர் செய்யப்படும் நிலத்தின் அளவுக்கு ஏற்ப மானியத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தலாம். இதன் வாயிலாக, விவசாயிகளின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், நைட்ரஜனின் ஒப்பீட்டு விலை, பயிர் சாகுபடி செலவுக்கு நெருக்கமாக இருக்கும்.
இந்தியாவுக்கென ஏ.ஐ., உத்தி
செ யற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா சற்றே தாமதமாக நுழைந்தாலும், ஏ.ஐ., பாதையை பின்பற்றி பொது நோக்கங்களை அடைய வேண்டும். உலக பொருளாதாரத்தை வடிவமைப்பதில் ஏ.ஐ., எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய்ந்து, இந்தியாவுக்கான நடைமுறை உத்தியை உருவாக்க வேண்டும்.
உலக அளவில் ஏ.ஐ., எதை பெறுகிறது, உள்நாட்டில் அது எதை நிறுவுகிறது, முன்கூட்டியே எதை நடைமுறைப்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
அரிய கனிமங்கள் அவசியம்
லி த் தியம், கோபால்ட், நிக்கல் போன்ற அரிய வகை தாதுக்கள், உலக பொருளாதாரத்தின் புதிய நெருக்கடி புள்ளிகளாக உருவெடுத்துள்ளன.
இந்தோனேஷியா, காங்கோ, சிலி போன்ற நாடுகளில் சுரங்க நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காப்பர் உள்ளிட்ட தாதுக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது, மின்சார கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களின் செயல்பாடுகளையும், வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும். இந்த சவால்களை எதிர்கொள்ள, இந்தியா, 'தேசிய முக்கிய தாதுக்கள்' திட்டத்தில், சர்வதேச கூட்டணிகளில் இணைந்து செயல்படுகிறது.
தனியார் முதலீடு குறைவு
க ட்டமைப்பு ரீதியான சில அடிப்படை காரணிகளே, தனியார் துறையினர் பெரிய முதலீடுகளை மேற்கொள்ள தயங்குவதற்கு காரணமாகும். நிதி நெருக்கடியோ, தொழில் துவங்க நோக்கமில்லாததோ கிடையாது.
அரசின் முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், முதலீட்டுக்கான பணத்தை திரட்டுவதற்கு கூடுதல் செலவு ஆவதாலும் நிர்வாக ரீதியான நடைமுறை சிக்கல்களாலும், தனியார் முதலீடுகள் குறைந்தே காணப்படுகின்றன. அதிக செலவு மற்றும் நீண்ட கால காத்திருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் புதிதாக உற்பத்தி ஆலைகளை துவங்குவதை விட, சேவை நிறுவனங்களின் விரிவாக்கத்திலேயே ஆர்வம் காட்டுகின்றன.
திவால் தீர்வு செயல்முறை
சி று, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான திவால் தீர்வு செயல்முறை தோல்வியடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 14 வழக்குகளை மட்டுமே அது அனுமதித்துள்ளது.
கலவையான விதிமுறைகளால் சிறு நிறுவனங்களுக்கு இது ஏற்றதாக இல்லை. திவால் நடைமுறைகளின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும். இப்போதுள்ள வழக்குகளை தீர்க்க 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.

