/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கவனத்தை ஈர்க்கும் சமபங்கு நிதிகள்
/
கவனத்தை ஈர்க்கும் சமபங்கு நிதிகள்
ADDED : மார் 18, 2024 12:41 AM

மியூச்சுவல் பண்ட் துறையில் சமபங்கு நிதிகளில் செய்யப்படும் முதலீடு பிப்ரவரி மாதம் கணிசமாக அதிகரித்துள்ளதும், குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த நிதிகள் அதிக முதலீடு பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் அடையாளமாக, சமபங்கு நிதிகளில் செய்யப்படும் முதலீடு நிகர வரத்து, கடந்த 23 மாதங்களில் இல்லாத அளவு பிப்ரவரி மாதம் 26,866 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சங்க தகவல் தெரிவிக்கிறது.
மேலும் குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்த நிதிகளில் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஸ்மால் மற்றும் மிட்கேப் நிதிகள் பிரிவிலும் முதலீடு அதிகரித்துள்ளது.
எனினும், லார்ஜ் கேப் நிதிகள் பிரிவில் முதலீடு குறைந்துள்ளது. இதே போல, கடன்சார் நிதிகள் பிரிவிலும் முதலீடு மாதாந்திர அடிப்படையில் முதலீடு குறைந்துள்ளது.
எனினும், லிக்விட் பண்ட் பிரிவில் இணையான காலத்தில் முதலீடு, 69 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. சீரான முதலீடு வழியான எஸ்.ஐ.பி., முறை மூலமான முதலீடும் அதிகரித்து உள்ளது.
புதிய மியூச்சுவல் பண்ட் கணக்கு துவக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.

