தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/எப் அண்டு ஓ வர்த்தக நேரம் நீட்டிப்பு

எப் அண்டு ஓ வர்த்தக நேரம் நீட்டிப்பு

எப் அண்டு ஓ வர்த்தக நேரம் நீட்டிப்பு

1


UPDATED : மே 31, 2026 05:12 PM

ADDED : மே 31, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 05:12 PM ADDED : மே 31, 2026 01:12 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 'ஈக்விட்டி எப் அண்டு ஓ' பிரிவுக்கான வர்த்தக நேரம் 10 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டு, மாலை 3:40 மணி வரை நடைபெறும் என்று தேசிய பங்கு சந்தை தெரிவித்துள்ளது. தற் போதைய நடைமுறையில், 3:30 மணிக்கு வர்த்தகம் முடிகிறது.

பங்கு வர்த்தக பிரிவில் அறிமுகமாகும் 'நிறைவு ஏல அமர்வு' நடைமுறையுடன் ஈக்விட்டி எப் அண்டு ஓ பிரிவையும் ஒருங்கிணைப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிறைவு ஏல அமர்வு என்பது சந்தை முடியும் நேரத்தில் நியாயமான விலையை தீர்மானிக்க, முதலீட்டாளர்கள் வாங்கும், விற்கும் ஆர்டர்களை சமர்ப்பிக்க வழங்கப்படும் குறுகிய நேர வர்த்தக அமர்வு ஆகும்.

நிறைவு விலையை நிர்ணயிப்பதற்கான கணக்கீடு, இனி மாலை 3:10 முதல் 3:40 மணி வரையிலான வர்த்தகத்தின் அடிப்படையில் அமையும் என்றும் இதர வர்த்தக நேரங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us