தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/சில்லரை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

சில்லரை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

சில்லரை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள்


ADDED : மார் 11, 2024 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 12:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு முதலீடு அதிக பலன் அளிக்கவல்லது என்பதும், அதற்கேற்ற இடர்களை கொண்டது என்பதும் பரவலாக அறியப்பட்டது தான். பங்கு முதலீட்டில் ஆர்வம் உள்ளவர்கள், அதிக லாபம் அளிக்கக்கூடிய அணுகுமுறையை நாடுவதும் இயல்பாக இருக்கிறது.

பலன் முக்கியம் என்றாலும், அதிக பலனை நோக்கமாகக் கொண்டு செயல்படும் போது, முதலீடு உத்தி தொடர்பான முக்கிய அம்சங்களை கவனிக்க மறந்து போகலாம். இது, பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். சில்லரை முதலீட்டாளர்கள் வழக்கமாகச் செய்யும் தவறுகளையும், அவற்றை தவிர்க்க வேண்டிய வழிகளையும் பார்க்கலாம்.

மலிவு விலை பங்குகள்:


பங்குச் சந்தையில் எப்போது ஜாக்பாட் அடிக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் மலிவு விலை பங்குகள் உயர்ந்து, பலனை அள்ளித் தரலாம். ஆனால், பென்னி பங்குகள் என குறிப்பிடப்படும் இந்த பங்குகளில் முதலீடு செய்வது யூகம் சார்ந்தது. மாறாக, நல்ல அடிப்படை கொண்ட பங்குகளை தேர்வு செய்வதே சிறந்தது.

முதலீடு அச்சம்:


பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களையும், பல்வேறு போக்குகளையும் கொண்டது. குறிப்பிட்ட

ஒரு போக்கு உச்சத்தில் இருக்கும்போது அதை தவறவிடுகிறோம் எனும் அச்சம் ஏற்படலாம். எனினும், இத்தகைய அச்ச உணர்வால் முதலீடு முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.

சரியும் பங்குகள்:


ஏறுமுகம் கொண்ட பங்குகளை வாங்க முற்படுவது இயல்பானது என்றாலும், சரியும்

பங்குகளும் நல்ல மதிப்பை கொண்டிருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. எனினும், விலை சரிகிறது என்பதற்காக மட்டும் ஒரு பங்கை வாங்குவது சரியான அணுகுமுறையல்ல.

ஏன் சரிவு?


ஒரு பங்கின் விலை போக்கு எப்படி இருந்தாலும், அதற்கான காரணங்களை அலசி ஆராய வேண்டும். பெரும்பாலான சரியும் பங்குகள் அதற்கான காரணங்களை கொண்டிருக்கலாம். எனவே, விலை மட்டும் முக்கிய அம்சமல்ல. தொடர்புடைய அம்சங்களையும் பரிசீலித்த பிறகே, குறிப்பிட்ட அந்த பங்கை வாங்குவது பற்றி தீர்மானிக்க வேண்டும்.

நீண்ட காலம்:


பங்குச் சந்தையின் பாலபாடமாக நீண்ட கால முதலீடு அமைகிறது. எனவே, குறுகிய கால

போக்குகளால் ஈர்க்கப்படுவதை தவிர்ப்பது நல்லது. ஏற்ற இறக்கங்களை மீறி சீராக முதலீடு செய்வதும், பொறுமை காப்பதும் வெற்றிகரமான பங்கு முதலீட்டிற்கான அடிப்படை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us