/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இந்தியாவில் அன்னிய முதலீடு நாடுகள் 112 ஆக உயர்வு
/
இந்தியாவில் அன்னிய முதலீடு நாடுகள் 112 ஆக உயர்வு
ADDED : ஜூன் 08, 2025 12:14 AM

புதுடில்லி:இந்தியா, அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போது 112 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பியுஷ் கோயல் கூறியதாவது:
கடந்த 2013 - 14 நிதியாண்டில், 89 நாடுகளில் இருந்து பெற்ற அன்னிய நேரடி முதலீட்டை, தற்போது 112 நாடுகளில் இருந்து இந்தியா பெற்று வருகிறது. இது, நம் நாட்டின் மீது அதிகரித்து வரும் உலகளாவிய ஈர்ப்பைக் காட்டுகிறது. இந்தியாவை, உலகின் மிகவும் விரும்பத்தக்க முதலீட்டு இடமாக மாற்ற, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு 6.89 லட்சம் கோடி ரூபாயாக கணிசமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டான 2023 - 24ல் பெறப்பட்ட 6.06 லட்சம் கோடி ரூபாயைவிட 14 சதவீதம் வளர்ச்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.