/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நாமக்கலில் 'டைடல் பார்க்' டெண்டர் கோரியது அரசு
/
நாமக்கலில் 'டைடல் பார்க்' டெண்டர் கோரியது அரசு
ADDED : ஜூன் 27, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நாமக்கல் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வேலைவாய்ப்பை உருவாக்க, ராசிபுரத்தில் டைடல் பார்க் கட்டுவதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
நாமக்கலில் உள்ள ராசிபுரத்தில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய டைடல் பார்க் கட்டுவதற்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை மூன்று மாதங்களுக்குள் முடித்து, செப்டம்பருக்குள் கட்டுமான பணிகளை துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ராசிபுரம் டைடல் பார்க் வாயிலாக, 500க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

