/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'நேரடி விற்பனை வணிகம் சரியாக உள்ள வரை அரசு தலையிடாது'
/
'நேரடி விற்பனை வணிகம் சரியாக உள்ள வரை அரசு தலையிடாது'
'நேரடி விற்பனை வணிகம் சரியாக உள்ள வரை அரசு தலையிடாது'
'நேரடி விற்பனை வணிகம் சரியாக உள்ள வரை அரசு தலையிடாது'
ADDED : ஜன 13, 2024 12:19 AM

புதுடில்லி:நேரடி விற்பனை வணிகத் துறை, பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல், சரியாக இருக்கும் வரை, அதன் வணிக முறையில் அதிகாரிகள் தலையிடமாட்டார்கள் எனவும், அவை அரசை ஏமாற்ற முடியாது எனவும், நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
நேரடி விற்பனை வணிகங்கள், பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
நேரடி விற்பனை வணிகங்கள் சரியாக உள்ள வரை, அரசு அவர்களுடன் இருக்கும். ஒருவேளை பணமோசடியில் ஈடுபட்டால், சந்தா பற்றி விளக்கப்படவில்லை என்றால், அரசு தலையிடும். அதிகாரிகள், வணிக முறையில் தலையிட மாட்டார்கள் என்று கருதி அரசை ஏமாற்ற முடியாது.
நேரடி விற்பனைத் துறையில் உள்ள சில நிறுவனங்கள் தவறான செயல்களில் ஈடுபட்டதை அடுத்து, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்துறையில், தயாரிப்புகள் பல பிரிவுகள் வாயிலாக விற்கப்படுவதால், அதன் வணிக முறையில் அரசு தலையிட விரும்பவில்லை. எனவே, தங்களின் வணிக முறையை தெளிவுபடுத்த வணிகங்கள் முன்வர வேண்டும்.
நேரடி விற்பனை வணிகங்கள், சில்லறை வர்த்தகத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. இத்துறையின் தற்போதைய சந்தை அளவு, 50,000 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பாண்டில் இதை இரு மடங்காக உயர்த்துவதே நோக்கம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.