/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'கொச்சின் ஷிப்யார்டு' பங்குகளை விற்கிறது அரசு
/
'கொச்சின் ஷிப்யார்டு' பங்குகளை விற்கிறது அரசு
ADDED : அக் 16, 2024 10:43 PM

புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த 'கொச்சின் ஷிப்யார்டு' நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கப்பல் பழுதுபார்க்கும், கப்பல் கட்டும் நிறுவனமாக கொச்சின் ஷிப்யார்டு திகழ்ந்து வருகிறது. இதன் தலைமையகம் கொச்சியில் உள்ளது. செப்.,30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் 72.86 சதவீத பங்குகள் மத்திய அரசின் கைவசமுள்ளது. இந்நிலையில், தன் வசமுள்ள 5 சதவீத பங்குகளை, பங்கு ஒன்றின் விலை 1,540 ரூபாய் என, விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அத்துடன், 'கிரீன் ஷூ ஆப்ஷன்' முறையில், 2.50 சதவீத பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு, கூடுதலாக 2.50 சதவீதம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தது.
இதனையடுத்து, நேற்று காலை வர்த்தகம் துவங்கிய போது, 1,605 ரூபாயாக இருந்த இந்நிறுவன பங்கு விலை, 5 சதவீதம் சரிந்து, வர்த்தக நேர முடிவில் 1,598 ரூபாயாக குறைந்தது.