ADDED : ஜன 11, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொது சேம நல நிதிக்கு, இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கு 7.10 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம், பொது சேம நல நிதி பிடித்தம் செய்யப் படுகிறது. இத்தொகைக்கு, கடந்த ஆண்டு 7.10 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு ஜன., 1 முதல் மார்ச் 31 வரை, பொது சேம நல நிதிக்கு, 7.10 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தர விட்டது. அதை பின்பற்றி, தமிழக அரசும் 7.10 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து உள்ளது.