தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ முக்கிய துறைகளின் வளர்ச்சி நவம்பர் மாதத்தில் குறைந்தது

 முக்கிய துறைகளின் வளர்ச்சி நவம்பர் மாதத்தில் குறைந்தது

 முக்கிய துறைகளின் வளர்ச்சி நவம்பர் மாதத்தில் குறைந்தது


ADDED : டிச 23, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, கடந்த நவம்பர் மாதத்தில் 1.80 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு நவம்பரில் 5.80 சதவீதமாக இருந்தது.

எனினும், முந்தைய அக்டோபர் மாதத்தில் எட்டு துறைகளின் உற்பத்தி, வளர்ச்சி காணாமல் மைனஸ் 0.10 சதவீதம் சரிவு கண்டிருந்தது.

எட்டு முக்கிய துறைகளில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள், மின்சாரம், உரம் மற்றும் ஸ்டீல் ஆகியவை அடங்கும்.

இதில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எண்ணெய் பொருட்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி குறைந்ததே, கடந்த மாதம் வளர்ச்சி சரிய காரணமாக அமைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - நவம்பர் காலகட்டத்தில் சராசரி உற்பத்தி வளர்ச்சி 2.40 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்தில் 4.40 சதவீதமாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us