/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'நியூசிலாந்துக்கு இந்திய ஏற்றுமதி உயரும்' ஜி.டி.ஆர்.ஐ., கணிப்பு
/
'நியூசிலாந்துக்கு இந்திய ஏற்றுமதி உயரும்' ஜி.டி.ஆர்.ஐ., கணிப்பு
'நியூசிலாந்துக்கு இந்திய ஏற்றுமதி உயரும்' ஜி.டி.ஆர்.ஐ., கணிப்பு
'நியூசிலாந்துக்கு இந்திய ஏற்றுமதி உயரும்' ஜி.டி.ஆர்.ஐ., கணிப்பு
ADDED : டிச 25, 2025 01:17 AM

புதுடில்லி,:தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதால், நியூசிலாந்துக்கு இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும் என சர்வதேச வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., கணித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கை வருமாறு:
நியூசிலாந்துடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதும், இருதரப்பு வணிகம் அதிகரிக்கும். இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பதுடன் இந்திய பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக நியூசிலாந்து மாறக்கூடும்.
பல்வேறு பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதால், சர்வதேச அளவில் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா உருவாக இது வழிவகுக்கும்.
குறிப்பாக, உணவு பொருட்கள், மருந்துகள், இயந்திரங்கள், மின்னணு பொருட்கள், வாகனங்கள், பர்னிச்சர் உள்ளிட்டவற்றை இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும்.