/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கட்டமைப்பு துறைக்கு உத்தரவாத நிதி ரூ.20,000 கோடியில் வருகிறது
/
கட்டமைப்பு துறைக்கு உத்தரவாத நிதி ரூ.20,000 கோடியில் வருகிறது
கட்டமைப்பு துறைக்கு உத்தரவாத நிதி ரூ.20,000 கோடியில் வருகிறது
கட்டமைப்பு துறைக்கு உத்தரவாத நிதி ரூ.20,000 கோடியில் வருகிறது
ADDED : செப் 14, 2025 12:55 AM

புதுடில்லி, செப். 14-
கட்டமைப்பு துறையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 20,000 கோடி ரூபாய்க்கு அபாய உத்தரவாத நிதியை ஏற்படுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனமான என்.சி.ஜி.டி.சி., இந்த நிதியை நிர்வகிக்கும் எனக் கூறப்படுகிறது. கொள்கை நிலையற்றத்தன்மை, வணிகமல்லாத அபாயங்கள் ஆகியவற்றில் இருந்து, முதலீட்டாளர்களை காக்கும் வகையில், இழப்புகளை இந்த நிதி ஈடுகட்டும்.
இந்த நிதிக்கான ஆரம்பகட்ட தொகுப்பை மத்திய அரசு செலுத்தும். நாட்டின் கட்டமைப்பு திட்டங்களின் செயல்பாட்டில் மட்டுமே இந்த நிதி கவனம் செலுத்தும் என்றும் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.
திட்டத்தின் வளர்ச்சியில் தடை, தாமதம், கூடுதல் செலவு, நில கொள்முதல், சுற்றுச்சூழல் அனுமதிகள் ஆகியவற்றில் இந்த நிதி கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிதி உருவாக்கத்துக்கான பரிந்துரையை தேசிய நிதி கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வங்கியான என்.ஏ.பி.எப்.ஐ.டி., இன்னும் இரண்டு வாரங்களில் அரசுக்கு அளிக்கஉள்ளது.
அதை ஆய்வு செய்து கட்டமைப்பு அபாய உத்தரவாத நிதியை உருவாக்க, அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

