/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரூ.120 கோடி முதலீடு திரட்டியது யுனிகோ
/
ரூ.120 கோடி முதலீடு திரட்டியது யுனிகோ
ADDED : செப் 14, 2025 12:53 AM

சென்னை:சென்னையை தலைமையிடமாக கொண்ட யுனிகோ ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், அனிகட் கேபிடல், யூசி இம்பவர் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 120 கோடி ரூபாய் முதலீடு திரட்டி உள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் நிகர மதிப்பு 210 கோடி ரூபாயை கடந்துள்ளது.
சிறிய நகரங்களை சேர்ந்த சுயதொழில் புரிவோர், நடுத்தர வருமான பிரிவினர் மற்றும் முதல்முறை வீடு வாங்குவோருக்கு கடன்களை அளிப்பதில் யுனிகோ நிறுவனம் முன்னுரிமை அளித்து வருகிறது. வீடு கட்ட, வாங்க மற்றும் வீட்டை மேம்படுத்த சராசரியாக 13 முதல் 15 லட்சம் ரூபாய் வரை கடன்களை இது வழங்கி வருகிறது. கடந்த 2023 டிசம்பரில் துவங்கப்பட்ட யுனிகோ ஹவுசிங் பைனான்ஸ், மிக குறுகிய காலத்தில், 7 மாநிலங்களில் 86 கிளைகளை பரப்பி உள்ளது.

