/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மொத்த விலை பணவீக்கம் ஜனவரியில் 0.27 சதவீதமாக சரிவு
/
மொத்த விலை பணவீக்கம் ஜனவரியில் 0.27 சதவீதமாக சரிவு
மொத்த விலை பணவீக்கம் ஜனவரியில் 0.27 சதவீதமாக சரிவு
மொத்த விலை பணவீக்கம் ஜனவரியில் 0.27 சதவீதமாக சரிவு
ADDED : பிப் 15, 2024 02:04 AM

புதுடில்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த ஜனவரி மாதம் 0.27 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும், குறைந்து வரும் உணவுப் பொருட்களின் விலையே இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வர்த்தக அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.27 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 0.73 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஜனவரியில் 4.80 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, தொடர்ந்து ஏழு மாதங்களாக மைனஸ் நிலையிலேயே பதிவாகி இருந்த பணவீக்கம், நவம்பரில் 0.39 சதவீதமாக பதிவானது.
உணவுப் பொருள் பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில் 9.38 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், ஜனவரியில் 6.85 சதவீதமாக குறைந்துஉள்ளது. கடந்த டிசம்பரில், காய்கறிகளில் 26.30 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜனவரியில் 19.71 சதவீதமாக குறைந்துஉள்ளது.
பணவீக்கம், பருப்பு வகைகளில் 16.06 சதவீதமாகவும்; பழங்களில் 1.01 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

