தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இருசக்கர வாகன விற்பனை: எகிறும் ஹீரோ, இறங்கும் ஹோண்டா

இருசக்கர வாகன விற்பனை: எகிறும் ஹீரோ, இறங்கும் ஹோண்டா

இருசக்கர வாகன விற்பனை: எகிறும் ஹீரோ, இறங்கும் ஹோண்டா


UPDATED : ஜூலை 04, 2025 09:19 AM

ADDED : ஜூலை 03, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2025 09:19 AM ADDED : ஜூலை 03, 2025 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஜூன் மாதத்தில், இருசக்கர வாகன விற்பனை 1.79 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டில், 15.44 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில், 15.16 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் இடத்தில் நீடிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், ஹீரோவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்திருந்த ஹோண்டா நிறுவனம், மீண்டும் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக இந்நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.





மே மாத விற்பனையில், 7.40 சதவீதம் வீழ்ச்சி கண்ட நிலையில், கடந்த மாத விற்பனை, 19.43 சதவீதம் அளவுக்கு பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us