/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நடப்பாண்டில் வீடு விற்பனை சென்னையில் 11 சதவீதம் சரிவு
/
நடப்பாண்டில் வீடு விற்பனை சென்னையில் 11 சதவீதம் சரிவு
நடப்பாண்டில் வீடு விற்பனை சென்னையில் 11 சதவீதம் சரிவு
நடப்பாண்டில் வீடு விற்பனை சென்னையில் 11 சதவீதம் சரிவு
ADDED : டிச 30, 2024 01:01 AM

புதுடில்லி:நடப்பாண்டில், சென்னையில் மட்டும் வீடுகள் விற்பனை 11 சதவீதம் குறைந்துள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'அனராக்' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
நடப்பாண்டில், ஏழு முக்கிய நகரங்களில், வீடு விற்பனை 4 சதவீதம் குறைந்து, 4.60 லட்சமாக உள்ளது. இருந்தபோதிலும், மதிப்பின் அடிப்படையில், விற்பனை 16 சதவீதம் உயர்ந்து, 5.68 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
தேர்தல் காரணமாக, ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களால், நடப்பாண்டில் புதிய குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு துவக்கத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே, விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்.
இருப்பினும், நிலம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், நடப்பாண்டில் சராசரியாக வீடு விலை 21 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டில் வீடு விற்பனையானது மதிப்பின் அடிப்படையில் வளர்ச்சி காண உதவியுள்ளது.
நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், கடந்த 2023ம் ஆண்டில் 4.77 லட்சம் வீடுகள் விற்றிருந்த நிலையில், நடப்பாண்டில் 4.60 லட்சமாக விற்பனை சரிந்துள்ளது.
இருப்பினும், மதிப்பின் அடிப்படையில், ஒட்டுமொத்த விற்பனை கடந்த ஆண்டில் 4.88 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, நடப்பாண்டு 16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.68 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.-