/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
கேஷ்பேக் கிரெடிட் கார்டு மூலம் அதிக பலன் பெறுவது எப்படி?
/
கேஷ்பேக் கிரெடிட் கார்டு மூலம் அதிக பலன் பெறுவது எப்படி?
கேஷ்பேக் கிரெடிட் கார்டு மூலம் அதிக பலன் பெறுவது எப்படி?
கேஷ்பேக் கிரெடிட் கார்டு மூலம் அதிக பலன் பெறுவது எப்படி?
ADDED : நவ 25, 2024 12:34 AM

பலவிதமான கிரெடிட் கார்டுகள் இருப்பது போல, கிரெடிட் கார்டு பயன்பாடு மூலம் கிடைக்கும் பலன்களும் பலவிதமாக அமைகின்றன. இவற்றில் கேஷ்பேக் சலுகை முக்கியமானதாக கருதப்படுகிறது. கேஷ்பேக் சலுகையை முக்கியமாக கொண்ட கார்டுகள் கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் என குறிப்பிடப்படுகின்றன.
இந்த கார்டுகள், மொத்த பயன்பாட்டில் ஒரு தொகையை கேஷ்பேக்காக திரும்பி அளிக்கின்றன. கேஷ்பேக் கிரெடிட் கார்டுகள் அண்மை காலமாக அதிக அளவில் நாடப்படுகின்றன. இந்த வகை கார்டு பயன்பாடு தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கேஷ்பேக் சலுகை:
கார்டு மூலம் செலவழிக்கப்படும் மொத்த தொகையில் ஒரு பகுதியை, கேஷ்பேக் கார்டுகள் திரும்ப பெற வழி செய்கின்றன. இது 5 சதவீதம் வரை அமையலாம். கார்டுகளுக்கு ஏற்ப இவை மாறுபடலாம். ஒரு சில பிரிவுகளுக்கு விதிவிலக்கு உண்டு. ஒரு சிலவற்றுக்கு அதிக சலுகைகளும் இருக்கலாம்.
சலுகை வகைகள்: @@
கேஷ்பேக் கார்டுகளில் பல வகை இருக்கின்றன. இவற்றின் சலுகை வழங்கும் முறைகள் மாறுபடும். ஒரு சில கார்டுகள், அனைத்து வகையான செலவுகள் தொடர்பாக தட்டையான சலுகை அளிக்கலாம். ஒரு சில கார்டுகள், செலவு வகைகளுக்கு ஏற்ப சலுகைகளை அளிக்கலாம்.
சிறப்பு போனஸ்:
ஒரு சில கார்டுகள், பயனாளிகள் தங்களுக்கான போனஸ் பிரிவுகளை மாதாந்திர பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் வாய்ப்பை அளிக்கின்றன. மளிகை பொருட்கள், இணைய ஷாப்பிங், பெட்ரோல், ரெஸ்டாரன்ட்கள், பில் செலுத்துதல் ஆகியவை பிரபலமான பிரிவுகள். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் சிறப்பு போனஸ் அளிக்கப்படுவதும் உண்டு.
அதிக பலன்கள்:
கார்டு மூலம் அதிக பலன் பெற, பயனாளிகள் தங்கள் செலவு பழக்கத்திற்கு ஏற்ற கார்டை தேர்வு செய்ய வேண்டும். சலுகை புள்ளிகளை கவனமாக கண்காணித்து வர வேண்டும். சிறப்பு சலுகைகளை கவனிக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான முறையில் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வரம்புகள் உண்டு:
கேஷ்பேக் கார்டுகளில் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. இவற்றுக்கான ஆண்டு கட்டணம் அதிகமாக இருக்கலாம். ஒரு சில கார்டுகள் அதிக வட்டி வசூலிக்கலாம்; செலவு வரம்புகளும் இருக்கலாம். மேலும் மிகை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையாகவும் அமையலாம்.