/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
யு.பி.ஐ., மூலம் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?
/
யு.பி.ஐ., மூலம் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?
யு.பி.ஐ., மூலம் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?
யு.பி.ஐ., மூலம் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?
ADDED : பிப் 02, 2025 09:00 PM

கிரெடிட் கார்டு போக்குகள் தொடர்பான அண்மை அறிக்கை ஒன்று, யு.பி.ஐ., மேடையில் இயங்கக்கூடிய கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்கள் மாதந்தோறும் சராசரியாக 40 பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கிறது. இது வழக்கமான கிரெடிட் கார்டு பயனாளிகள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை விடஅதிகமாகும்.
அதே நேரத்தில் யு.பி.ஐ., வசதி காரணமாக, ரூபே கிரெடிட் கார்டின் சந்தை பங்கும் அதிகரித்திருக்கிறது. யு.பி.ஐ., கிரெடிட் கார்டின் வசதி நிதி பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கி இருந்தாலும், இதன் அடிப்படை அம்சங்களை அறிந்து செயல்படுவது அவசியம்.
எளிய வசதி:
யு.பி.ஐ., வசதி கொண்ட கிரெடிட் கார்டுகள் சராசரி கிரெடிட் கார்டு போன்றவை தான். ஆனால் இந்த கார்டு, யு.பி.ஐ., அடையாளத்துடன் இணைக்கப்பட்டது. எனவே, கார்டுதாரர்கள் 'கூகுள்பே, போன்பே' போன்ற யு.பி.ஐ., செயலிகளுடன் கார்டை இணைத்து பணம் செலுத்தலாம். இந்த பரிவர்த்தனை வங்கி கணக்கில் அல்லாமல், கார்டு கணக்கில் சேரும்.
கூடுதல் கார்டு:
பல்வேறு வங்கிகளின் ரூபே கிரெடிட் கார்டு, யு.பி.ஐ., வசதியை கொண்டுள்ளன. வழக்கமான
கிரெடிட் கார்டுடன், இந்த கார்டை கூடுதலாகவும் பெற்று பயன்படுத்தலாம். வழக்கமான கிரெடிட் கார்டு ஏற்கப்படுவதை விட, அதிகமான இடங்களில் இந்த கார்டை பரிவர்த்தனைக்காக பயன்படுத்தலாம்.
மொபைல் பணம்:
யு.பி.ஐ., கிரெடிட் கார்டு மூலம், கார்டு கையில் இல்லாமல் மொபைல் செயலி வாயிலாக
பணம் செலுத்தலாம். பணப் பரிவர்த்தனை இயந்திரங்கள் இல்லாத மளிகை கடை போன்ற சிறிய கடைகளில் கூட கார்டை பயன்படுத்தலாம் என்பது, இதில் உள்ள கூடுதல்
சாதக அம்சம்.
கவனம் தேவை:
இந்த கார்டு பரிவர்த்தனையை பரவலாக்கும் தன்மை கொண்டது என்றாலும், இதன் பயன்பாட்டில்கவனம் தேவை. இதன் எளிய பயன்பாடு காரணமாக, தேவைக்கு அதிகமாக செலவிடும் வாய்ப்புள்ளது. மேலும்,கார்டிற்காக பொருந்தக்கூடிய இதர கட்டணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு அம்சம்:
மேலும் சிறிய அளவில் செலவு செய்யும் போது, மொத்த தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கும்என்பதால், நிலுவையில் உள்ள செலுத்த வேண்டிய தொகையை கணக்கில் கொள்ள வேண்டும். யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு பொருந்தக்கூடிய பாதுகாப்பு அம்சங்களையும் மனதில்
கொள்ள வேண்டும்.