எஸ்.யு.வி., வாகன விற்பனை ஹூண்டாய் கிரெட்டா முன்னணி
எஸ்.யு.வி., வாகன விற்பனை ஹூண்டாய் கிரெட்டா முன்னணி
ADDED : மே 05, 2025 11:11 PM

குருகிராம்,ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்.யு.வி., கார், கடந்த ஏப்ரலில் அதிகம் விற்பனையான எஸ்.யு.வி., காராக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக, அதிகம் விற்பனையான எஸ்.யு.வி., என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
கடந்த மாதத்தில், 17,016 கிரெட்டா கார்கள் நாடு முழுதும் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது, 10.20 சதவீதம் அதிகம்.
நடப்பாண்டிலும், இது அதிகம் விற்பனையான எஸ்.யு.வி.,யாக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, 69,914 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த விற்பனையில், எஸ்.யு.வி., கார்களின் பங்கு 70.90 சதவீதமாக உள்ளது.
கிரெட்டா காரை தொடர்ந்து, வென்யூ, எக்ஸ்டர், அல்கஸார் உள்ளிட்ட கார்கள் விற்பனையில் பின் தொடர்கின்றன.
இதுகுறித்து, ஹூண்டாய் நிறுவன தலைமை இயக்க அதிகாரி தருண் கார்க் கூறியதாவது:
இந்திய சந்தையில் கிரெட்டா கார் ஆதிக்கம் செலுத்துவது, வாடிக்கையாளர்கள் இந்த பிராண்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், அன்பையும் பிரதிபலிக்கிறது. மின்சார வகை கிரெட்டா கார் அறிமுகமானது, இந்த பிராண்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
