/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'நிப்டி நெக்ஸ்ட் 50' குறியீட்டில் ஹூண்டாய்
/
'நிப்டி நெக்ஸ்ட் 50' குறியீட்டில் ஹூண்டாய்
ADDED : மார் 29, 2025 01:06 AM

மும்பை:தேசிய பங்குச் சந்தையில், நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி 100 மற்றும் நிப்டி 500 ஆகிய குறியீடுகளில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்கு சேர்க்கப்பட்டு உள்ளது.
நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்தாண்டு அக்.,22ம் தேதி, புதிய பங்கு வெளியீடு வாயிலாக, இந்திய சந்தைக்குள் நுழைந்தது.
கடந்த மார்ச் 24 முதல், மும்பை பங்குச் சந்தையின் பி.எஸ்.இ.,500 உள்ளிட்ட குறியீடுகளில் சேர்க்கப்பட்டது.
இது குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்ததாவது:
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான நாங்கள், அடுத்த முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளோம்.
இந்திய மூலதனச் சந்தை குறியீடுகளான நிப்டி நெக்ஸ்ட் 50 மற்றும் பி.எஸ்.இ.,500 ஆகியவற்றில் இடம்பெறுவது, ஹூண்டாய் இந்தியாவின் பங்குகள் சந்தையின் இருப்பு மற்றும் வலுவான நம்பகத்தன்மையுடன் இருப்பதை காட்டுகிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

