/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சென்னை ஏ.ஐ., மையத்தை விரிவாக்கம் செய்தது இக்னிதோ
/
சென்னை ஏ.ஐ., மையத்தை விரிவாக்கம் செய்தது இக்னிதோ
ADDED : பிப் 08, 2025 10:05 PM

சென்னை:சென்னையில் புதிய விரிவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தை, இக்னிதோ டெக்னாலஜிஸ் துவக்கி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் டிஜிட்டல் பொறியியல் நிறுவனமான இக்னிதோ டெக்னாலஜிஸ், சென்னை சோழிங்கநல்லுார் எல்காட் வளாகத்தில், புதிய விரிவாக்கப்பட்ட ஏ.ஐ., மையத்தை அமைத்து உள்ளது. இதனை, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏ.ஐ., திறன்களை மையமாகக் கொண்டு, குழுவின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த விரிவாக்கமானது, எங்கள் உக்திசார் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் புதிய மையமானது, எல்.எல்.எம்.,கள், மெஷின் லேர்னிங் மற்றும் ஜெனரல் ஏ.ஐ., போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, அதிக செயற்கை நுண்ணறிவு முகவர்களை உருவாக்குவதற்கும் பயன்படும் ஒரு மையமாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

