/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வருமான வளர்ச்சி ஏற்றத்தாழ்வு 10 ஆண்டுகளில் 74 சதவீதம் சரிவு
/
வருமான வளர்ச்சி ஏற்றத்தாழ்வு 10 ஆண்டுகளில் 74 சதவீதம் சரிவு
வருமான வளர்ச்சி ஏற்றத்தாழ்வு 10 ஆண்டுகளில் 74 சதவீதம் சரிவு
வருமான வளர்ச்சி ஏற்றத்தாழ்வு 10 ஆண்டுகளில் 74 சதவீதம் சரிவு
ADDED : அக் 28, 2024 02:09 AM

புதுடில்லி:கடந்த 10 ஆண்டுகளில், குறைந்த மற்றும் அதிக வருவாய் பிரிவினரிடையே வருமான வளர்ச்சி ஏற்றத்தாழ்வு, 74 சதவீதம் குறைந்திருப்பதாக, பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வருமான வரி எளிமைப்படுத்தப்பட்டதால் கிடைத்து வரும் பலன் குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015 வருமான வரி கணக்கீட்டு ஆண்டில் இருந்து, இந்த ஆண்டு வரை, மக்களின் வருவாய் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு கணிசமாக குறைந்திருக்கிறது.
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் இடையே, கடந்த 10 ஆண்டுகளில், வருவாய் ஏற்றத்தாழ்வு கிட்டத்தட்ட 74 சதவீதம் குறைந்துள்ளது.
ஆண்டுக்கு 3.50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவோர் இடையே, 31.80 சதவீதமாக 2014ல் இருந்த வருவாய் ஏற்றத்தாழ்வு, 12.80 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த, 2023ல் 54.60 சதவீதமாக இருந்த வருமான வரி வருவாய், 2024 கணக்கீட்டு ஆண்டில் 56.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வருமான வரித் தாக்கல் எண்ணிக்கை 8.60 கோடியாகவும், 2000-2001 ஆண்டுக்குப் பிறகு, நாட்டின் ஜி.டி.பி., மற்றும் நேரடி வரிகள் விகிதம் 6.64 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
இவ்வாறு எஸ்.பி.ஐ., ஆய்வில் கூறப்பட்டுஉள்ளது.