/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
திருத்தப்பட்ட ஐ.டி.ஆர்., படிவங்கள் வெளியிட்டது வருமான வரித்துறை
/
திருத்தப்பட்ட ஐ.டி.ஆர்., படிவங்கள் வெளியிட்டது வருமான வரித்துறை
திருத்தப்பட்ட ஐ.டி.ஆர்., படிவங்கள் வெளியிட்டது வருமான வரித்துறை
திருத்தப்பட்ட ஐ.டி.ஆர்., படிவங்கள் வெளியிட்டது வருமான வரித்துறை
ADDED : மே 01, 2025 12:24 AM

புதுடில்லி:வருமான கணக்கு தாக்கலுக்கான ஐ.டி.ஆர்., 1 மற்றும் 4 படிவங்களை, வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, 2024 - 25 நிதி ஆண்டுக்கான வருமான கணக்கு தாக்கல் துவங்கவுள்ளது.
ஐ.டி.ஆர்., 1 படிவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் நீண்டகால முதலீட்டு ஆதாயம், அதாவது எல்.டி.சி.ஜி., பெறுவோரும் ஐ.டி.ஆர்., 1 படிவத்தை பயன்படுத்தலாம். இதற்கு முன் இவர்கள் ஐ.டி.ஆர்., 2 படிவத்தில் வருமான கணக்கு தாக்கல் செய்து வந்தனர்.
பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டு போன்றவற்றின் சிறுமுதலீட்டாளர்களும் எளிதாக கணக்கு தாக்கல் செய்ய வசதியாக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பட்டியலிடப்பட்ட பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகள், வர்த்தக அறக்கட்டளைகளில் அதிகபட்சம் 1.25 லட்சம் ரூபாய் வரை நீண்ட கால முதலீட்டு ஆதாயம் பெறுவோர், ஐ.டி.ஆர்., 1 படிவத்தில் வருமான கணக்கு தாக்கல் செய்யலாம்.
மேலும், வர்த்தக வருமானம் உள்ளவர்கள் கணக்கு தாக்கல் செய்யும் ஐ.டி.ஆர்., 4 படிவத்தை, அதிகபட்ச ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய் வரை பெறுவோர் பயன்படுத்தலாம்.
நிறுவனத்தின் இயக்குநர், பட்டியலிடப்படாத பங்குகளில் முதலீடு செய்தவர்கள், வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்து இருப்பவர்கள், 5,000 ரூபாய்க்கு மேல் விவசாய வருமானம் உள்ளவர்கள், ஐ.டி.ஆர்., 4 படிவத்தை பயன்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
வருமான கணக்கு தாக்கல் செய்பவர்கள், அவரவர் வருமான வகையின்படி சரியான படிவத்தை தேர்வு செய்து, தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறை வலியுறுத்தி உள்ளது.