/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எத்தனால் இறக்குமதி கட்டுப்பாடு நீக்குவதற்கு இந்தியா பரிசீலனை
/
எத்தனால் இறக்குமதி கட்டுப்பாடு நீக்குவதற்கு இந்தியா பரிசீலனை
எத்தனால் இறக்குமதி கட்டுப்பாடு நீக்குவதற்கு இந்தியா பரிசீலனை
எத்தனால் இறக்குமதி கட்டுப்பாடு நீக்குவதற்கு இந்தியா பரிசீலனை
ADDED : மே 17, 2025 12:43 AM

புதுடில்லி:எத்தனால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இதுகுறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய விதிமுறை
*உள்நாட்டில் தயாரிக்கப்பட்டும் எத்தனாலை மட்டுமே எரிபொருள்களில் கலக்க பயன்படுத்த முடியும்
*இறக்குமதி செய்யப்படும் எத்தனாலை, எரிபொருள் அல்லாத பிற தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்
அமெரிக்காவின் வலியுறுத்தல்
*எரிபொருள் கலப்புக்கான எத்தனாலின் தேவை தான் அதிகம் என்பதால், அமெரிக்கா அதை வலியுறுத்தி வருகிறது
*வர்த்தக ஒப்பந்தம், சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
பாதிப்பு
1 உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை பாதிக்கும்.
2 உள்நாட்டு எத்தனால் உற்பத்தி குறைந்தால், வேலைவாய்ப்புகள் குறையக்கூடும்.
3 பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலை உருவாகும்
4 உள்நாட்டு விற்பனை விலையில் ஏற்படும் தாக்கம்
5 உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அரசின் முதலீடுகள், திட்டங்கள் பயனற்றுப் போகலாம்