/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சீனா - அமெரிக்கா பிரச்னையில் வாய்ப்பை பயன்படுத்த தவறிய இந்தியா ஆக்ஸ்போர்டு பொருளாதார ஆய்வறிக்கை

ADDED : அக் 22, 2024 10:58 PM

புதுடில்லி:சீனாவில் இருந்து இறக்குமதியை குறைத்துள்ள அமெரிக்காவுக்கு, பொருட்களை ஏற்றுமதி செய்ய கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இந்தியா தவறி விட்டதாக ஆக்ஸ்போர்டு பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா இடையே நடைபெறும் வர்த்தகப் போரால், சீனப் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வது குறைந்துள்ளது.
அமெரிக்காவில் சீனப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததன் இடைவெளியைப் பயன்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது.
உற்பத்தியை அதிகரித்து, பொருட்கள் ஏற்றுமதியை விரைவுபடுத்தும் அதன் முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என, ஆக்ஸ்போர்டு பொருளாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2017 முதல் 2023 வரை, அமெரிக்காவின் இறக்குமதியில் இந்திய பொருட்களின் பங்கு 0.60 சதவீதம் மட்டுமே உயர்ந்து 2.70 சதவீதமாக இருந்தது. அதுவே சீனாவின் பங்கு 14 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைந்தது.
இந்த இடைவெளியை வியட்நாம் நன்கு பயன்படுத்தியதில், அமெரிக்க இறக்குமதியில் அந்நாட்டின் பங்கு 1.70 சதவீதத்தில் இருந்து 3.70 சதவீதமாக அதிகரித்தது. தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை முறையே 1 சதவீதம், 0.70 சதவீதம் அதிகரித்தன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், சீனாவைப் போல் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கும் கடுமையான வரி விதிப்பார் எனத் தெரிகிறது. அது நடந்தால், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் மேலும் பாதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.