/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., வெளியீட்டில் இந்தியா முதலிடம்
/
ஐ.பி.ஓ., வெளியீட்டில் இந்தியா முதலிடம்
ADDED : பிப் 26, 2024 12:17 AM

ஐ.பி.ஓ., என குறிப்பிடப்படும் பொது பங்கு வெளியீடுகளில் கடந்த ஆண்டு இந்திய பங்குச்சந்தை உலக அளவில் முதலிடம் வகித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை தொடர்பான ஆய்வு நிறுவனமான இ.ஒய்., வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில், உலக அளவில் இந்திய பங்குச்சந்தைகளில் அதிக பங்கு வெளியீடு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த காலாண்டில், மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் 31 பங்கு வெளியீடுகள் நிகழ்ந்தன. முந்தைய ஆண்டின் இணையான காலத்தைவிட இது அதிகமாகும். மேலும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளும், முந்தைய ஆண்டின் இணையான காலத்தைவிட அதிகரித்து உள்ளன.
கடந்த நிதியாண்டின் முதல் அறையாண்டு காலத்தில் பங்கு வெளியீடுகள் மந்தமாக அமைந்தாலும், பின்னர் பங்கு வெளியீடு செயல்பாடுகள் தீவிரம் அடைந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. பங்கு வெளியீடு அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் அதிக அளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் பங்கு வெளியீடுகளில் உற்சாகமான போக்கை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

