/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்திலிருந்து முதலில் மீட்சி கண்ட இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்வு
/
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்திலிருந்து முதலில் மீட்சி கண்ட இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்வு
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்திலிருந்து முதலில் மீட்சி கண்ட இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்வு
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்திலிருந்து முதலில் மீட்சி கண்ட இந்திய சந்தைகள் சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்வு
ADDED : ஏப் 15, 2025 11:15 PM

மும்பை:உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளை பரமபத விளையாட்டாக மாற்றிய, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தில் இருந்து, மீட்சி கண்ட முதல் மிகப்பெரிய சந்தையாக, இந்திய பங்குச்சந்தை மாறியுள்ளது.
பரஸ்பர வரி விதிப்பில் இருந்து தற்காலிக விலக்குகளை அளித்து வரும் டிரம்ப், வாகனம், வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் யோசனை செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இதனால், உலகளாவிய பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் வர்த்தக நேரத்தின் போது நிப்டி 540 புள்ளிகள், சென்செக்ஸ் 1,750 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டன.
அதிகபட்சமாக வாகனம், நிதி மற்றும் ஐ.டி., துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வு கண்டன. வர்த்தக நேர முடிவில், நிப்டி 500 புள்ளிகளும், சென்செக்ஸ் 1,577 புள்ளிகளும் உயர்ந்தன. அமெரிக்க வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட ஏப்., 2ம் தேதிக்கு முந்தைய நிலையை சந்தைகள் எட்டி உள்ளன.
உயர்வுக்கு பிற காரணங்கள்
1 நேர்மறையான உலக சந்தை: மின்னணு பொருட்கள் இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக விலக்கு அளித்ததால், அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன.
திங்களன்று அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் 3 - 4 சதவீதம் அளவுக்கு உயர்வுடன் நிறைவு செய்தன.
2 ரூபாய் மதிப்பு உயர்வு: நேற்று வர்த்தகம் துவங்கிய போது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 39 பைசா அதிகரித்து, 85.71 ரூபாயாக இருந்தது.
அன்னிய செலாவணி சந்தையில், கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு முதலீடுகள் கைகொடுக்கவே, ரூபாய் மதிப்பு உயர்வு கண்டு வருகிறது.
3 முன்னணி நிறுவனங்கள்: அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ், எல் அண்டு டி., மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவே, சந்தை குறியீடுகள் உயர்வுக்கு அது வழிவகுத்தது.
நிப்டி வங்கி குறியீடு 2.35 சதவீதம் உயர்ந்து, 52,000 புள்ளிகளை மீண்டும் கடந்தது. எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி பங்குகள் தலா 3 சதவீதம் உயர்வு கண்டன.