sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பணவீக்கமும் சேர்ந்து கொண்டது

பணவீக்கமும் சேர்ந்து கொண்டது

பணவீக்கமும் சேர்ந்து கொண்டது


ADDED : நவ 14, 2024 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2024 11:28 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

•வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக வாராந்திர அடிப்படையில், இரண்டாவது வாரமாக, சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. நிப்டி 2.55 சதவீதமும்; சென்செக்ஸ் 2.40 சதவீதமும் இறக்கம் கண்டன.

• நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவது, உற்சாகம் இழக்கச் செய்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது பணவீக்கம் அதிகரிப்பால், பிற்பகலில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பனை செய்தனர்.

• நிப்டி குறியீட்டில், பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, நுகர்வோர் பொருட்கள் சார்ந்த குறியீடு, 1.53 சதவீதம் சரிவை கண்டது. மும்பை பங்குச் சந்தையில் 2,160 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும்; 1,798 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும்; 92 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.

• குருநானக் ஜெயந்தியை ஒட்டி, இந்திய பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,850 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 0.06 சதவீதம் குறைந்து, 1 பேரலுக்கு 72.24 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 7 பைசா சரிந்து, 84.46 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 ஐச்சர் மோட்டார்ஸ்

 ஹீரோ மோட்டோகார்ப்

 கிராசிம்

 கோட்டக் வங்கி

 எச்.டி.எப்.சி., லைப்

அதிக இறக்கம் கண்டவை

 ஹிந்துஸ்தான் யுனிலீவர்

 பி.பி.சி.எல்.,

 பிரிட்டானியா

 டாடா கன்ஸ்யூமர்

 நெஸ்லே இந்தியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us