/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஆன்லைன் வணிக கிடங்குகள் கண்காணிக்க அறிவுறுத்தல்
/
ஆன்லைன் வணிக கிடங்குகள் கண்காணிக்க அறிவுறுத்தல்
ADDED : நவ 08, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு அணுகுமுறையை கடைப்பிடிக்கும் வகையில், மின்னணு வணிக தளங்களின் கிடங்குகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, உணவு பாதுகாப்பு அமைப்பான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 45வது மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது.
'இ-காமர்ஸ்' எனப்படும் மின்னணு வணிகம் மற்றும் 'குயிக்-காமர்ஸ்' எனப்படும் விரைவு வணிக கிடங்குகளில் உணவு பாதுகாப்பு தர மீறல்கள் நடைபெறுவதாக புகார் எழுவது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.