/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு அனுமதி
/
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு அனுமதி
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு அனுமதி
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு அனுமதி
ADDED : ஜூலை 21, 2025 10:18 PM

புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட், 4,834 கோடி ரூபாயை டிபாசிட் செய்ததையடுத்து, பங்குச் சந்தை வர்த்தகத்தில் மீண்டும் ஈடுபட, செபி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளை தவறாகப் பயன்படுத்தி, நியாயமற்ற முன்பேர வணிக நடவடிக்கைகள் வாயிலாக 36,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக, ஜேன் ஸ்ட்ரீட் மீது செபி இம்மாத துவக்கத்தில் குற்றஞ்சாட்டி இருந்தது. மேலும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பங்கேற்க தடை விதித்து, 4,834 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மேற்கூறிய தொகையை டிபாசிட் செய்துள்ளதையடுத்து, நிறுவனத்துக்கு எதிரான இடைக்கால உத்தரவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இனி பொருந்தாது என, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு செபி மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது பங்குச் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து செபி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

