/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அமைச்சர் ராஜாவுக்கு ஜப்பான் ஆரஞ்சு
/
அமைச்சர் ராஜாவுக்கு ஜப்பான் ஆரஞ்சு
ADDED : பிப் 07, 2025 12:33 AM

சென்னை:ஜப்பானின் எஹிம் மாகாணம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையே தொழில் உறவுகளை மேம்படுத்த, கடந்த ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது ஜப்பானில் இருந்து 80 தொழில் பிரதிநிதிகள் சென்னை வந்து உள்ளனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, தொழில் துறை அமைச்சர் ராஜாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜப்பான் குழுவினர், தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று, தொழில் துவங்க உகந்த இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.
கடந்த முறை வந்த ஜப்பான் குழுவினரிடம் அமைச்சர் ராஜா பேசும்போது, 'உங்கள் நாட்டில் விளையும் சுவீட் ஆரஞ்சு எனக்குப் பிடிக்கும்' என, தெரிவித்துஉள்ளார். இதையடுத்து இம்முறை அந்நாட்டில் இருந்து எடுத்து வந்த ஆரஞ்சு பழங்களை ராஜாவை சந்தித்தபோது அவரிடம் வழங்கினர்.