கூட்டு மேம்பாட்டு திட்டம் 4 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு
கூட்டு மேம்பாட்டு திட்டம் 4 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு
ADDED : மே 26, 2026 03:57 AM

புதுடில்லி: ஹோண்டா நிறுவனத்தின் ஸ்டார்ட்அப் கூட்டு மேம்பாட்டு திட்டத்தில், நான்கு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஹோண்டா டிஜிட்டல் இனோவேஷன் இந்தியா மற்றும் டி - ஹப் என்ற ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க மையம் இணைந்து தொடங்கி உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் தேர்வான நான்கு நிறுவனங்களுக்கும், ஹோண்டா நிறுவனம் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கும்.
இதை பயன்படுத்தி, ஹோண்டா கார்களுக்கான புதிய டிஜிட்டல் சேவைகள், ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள், ஹோண்டா இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஒருங்கிணைப்பு ஆகிய போக்குவரத்து தீர்வுகளை புதுப்பிக்க வேண்டும்.
இதை, ஹோண்டா வாகனங்களில் நேரடியாக சோதனை செய்ய இரண்டு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. இறுதி விளக்கக்காட்சி ஜூலை 31ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஸ்டார்ட்அப் கூட்டு மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்க, 300க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இறுதியில், ஜேன் ஏ.ஐ., அடென்டொ டெக்னாலஜீஸ், ஆப் டெஸ்டிபை, சென்சைட் டெக்னாலஜிஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இதில் தேர்வு செய்யப்பட்டன.
