sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்கு திருப்பமாக அமையும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை 

/

 ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்கு திருப்பமாக அமையும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை 

 ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்கு திருப்பமாக அமையும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை 

 ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்கு திருப்பமாக அமையும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை 

3


UPDATED : ஜன 26, 2026 02:30 AM

ADDED : ஜன 26, 2026 02:29 AM

Google News

UPDATED : ஜன 26, 2026 02:30 AM ADDED : ஜன 26, 2026 02:29 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'ஐரோப்பாவுடன் இறுதி செய்யப்படவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்புமுனையாக அமையும்; அதிகபட்ச வர்த்தக வாய்ப்பு உருவாகும்' என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில், 2030ம் ஆண்டு முதல், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத ஜவுளி பொருள் இறக்குமதி கட்டாயமாகிறது; குறிப்பாக, மொத்த இறக்குமதியில், 50 சதவீதம் மறுசுழற்சி முறையில் உற்பத்தியான ஜவுளியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.Image 1526556திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மட்டுமே, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, ஐரோப்பிய நாடுகளுடனான ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நாளை இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக, இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, 10 சதவீத வரிச் சலுகை கிடைக்கும்.

ஏற்கனவே வரிச்சலுகை பெற்று வரும், வங்கதேச ம், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளின் போட்டியை, இந்திய ஏற்றுமதியாளர்கள் எளிதாக சமாளிக்க முடியும்.

கடந்த நிதியாண்டில், நம் நாட்டில் இருந்து, 64,753 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இதில், திருப்பூரில் இருந்து மட்டும், கிட்டத்தட்ட 23 சதவீத ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.ஐரோப்பாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகத்தில், முதலிடத்தில் இருப்பது திருப்பூர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறும் போது, திருப்பூருக்கு திருப்புமுனையாக அமையும். இதன் வாயிலாக அதிகபட்ச வர்த்தக வாய்ப்புகளை ஈர்க்க முடி யும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us