sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி முரட்டு அடிமையா? உதயநிதிக்கு பழனிசாமி கேள்வி

/

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி முரட்டு அடிமையா? உதயநிதிக்கு பழனிசாமி கேள்வி

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி முரட்டு அடிமையா? உதயநிதிக்கு பழனிசாமி கேள்வி

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி முரட்டு அடிமையா? உதயநிதிக்கு பழனிசாமி கேள்வி

9


UPDATED : பிப் 23, 2026 02:38 PM

ADDED : பிப் 23, 2026 05:17 AM

Google News

9

UPDATED : பிப் 23, 2026 02:38 PM ADDED : பிப் 23, 2026 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த கருணாநிதியை, முரட்டு அடிமை என உதயநிதி சொல்வாரா,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், பொன்னேரி தொகுதிகளில், பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.



அப்போது, அவர் பேசியதாவது: வாக்குறுதிகளை மறந்த துரோகி ஸ்டாலின்தான். ஆனால், அவர் என்னை துரோகி, பயந்தாங்கோலி என்கிறார். ஆனால், அவரோ ஆட்சி போய் விடும் என்ற பயத்தில், இப்போது, 'எனது ஆட்சி போனாலும் பரவாயில்லை' என பேசுகிறார். உங்களின் ஆட்சி போகப்போவது உறுதி.

எந்ததெந்த துறையில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளை அடித்து விட்டனர். ஸ்டாலின் டிரஸ்ட்டில், 8,000 கோடி ரூபாய் உள்ளது. அது எல்லாம் இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமா?

ஏதோ சொந்தப் பணத்தை கொடுப்பது போல, உரிமைத் தொகை பற்றி பேசுகிறார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், உரிமை தொகை வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். அ.தி.மு.க.,வின் அழுத்தத்தால், பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கிடைக்கிறது. குடும்ப வாரிசு ஆட்சி தொடரக் கூடாது.

ஏற்கனவே, தி.மு.க., கூட்டணியில் பல குழப்பங்கள். தேர்தல் வரை அந்த கூட்டணி நிலைக்குமா என, தெரியவில்லை. இப்போது துணை முதல்வர் பதவி கேட்டு, தே.மு.தி.க.,வும் அந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது.

பா.ஜ.,வுக்கு நான் முரட்டு அடிமை என, உதயநிதி சொல்கிறார். அப்படியென்றால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த உங்கள் தாத்தா கருணாநிதியை, முரட்டு அடிமை என சொல்வீர்களா; அவரை முரட்டு அடிமை என சொல்ல முடியாததால், என்னை சொல்கிறார். கத்துக்குட்டியான உதயநிதி வாய்க்கு வந்ததை பேசக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

'அப்செட்' ஆன பழனிசாமி!


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் மூர்த்திக்கு எதிராக, ஏற்கனவே மூன்று கோஷ்டிகள் உள்ளன. இதனால், மூர்த்தி ஆதரவாளர்களை தவிர மற்ற கோஷ்டியினர், அங்கு வர ஆர்வம் காட்டவில்லை. அதேபோல, பழனிசாமி வருகையை கூறி, அ.தி.மு.க., நிர்வாகிகள், வியாபாரிகளிடம் பெரிய தொகையை வசூல் செய்துள்ளனர். பேனரில் நிர்வாகிகள் போட்டோ போடுவதற்கும் தலைக்கு, 5,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதெல்லாம், பழனிசாமியின் கவனத்திற்கு செல்லவே, அவர் 'அப்செட்' ஆகியுள்ளார்.








      Dinamalar
      Follow us