ADDED : மே 05, 2025 11:12 PM

புதுடில்லி,'ஸ்டெலாண்டிஸ் இந்தியா' நிறுவனத்தின், வணிக வளர்ச்சி மற்றும் செயல்திறனை வேகப்படுத்த, தலைமைப் பொறுப்புகளில் மாற்றம் செய்துள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
குறிப்பாக, இந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜீப், சிட்ரான், அறிமுகமாக உள்ள லீப் மோட்டார் ஆகிய பிராண்டுகளை வலுப்படுத்த, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின வாகனப் பிரிவு இயக்குநர் மற்றும் வணிகத் தலைவர் குமார் பிரியெஷ், தற்போது இந்நிறுவனத்தின் சில்லரை வணிகப் பிரிவுக்கும் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதாவது, ஜீப், சிட்ரான் மற்றும் லீப் மோட்டார் பிராண்டுகளின் விற்பனை மற்றும் விற்பனை மையங்கள் இந்த பிரிவின் கீழ் வரும்.
நிறுவன வணிகங்கள் மற்றும் கூட்டணி பிரிவின் வணிக தலைவர் மற்றும் இயக்குநர் ஷிஷிர் மிஷ்ரா, போக்குவரத்து சேவைகள், பழைய கார் விற்பனை, நிதி மற்றும் காப்பீட்டுத் தீர்வுகள் ஆகிய பிரிவுகளுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
