/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அதிக சந்தை மதிப்பில் ஐந்தாவது இடத்தில் எல்.ஐ.சி.,
/
அதிக சந்தை மதிப்பில் ஐந்தாவது இடத்தில் எல்.ஐ.சி.,
ADDED : பிப் 09, 2024 01:24 AM

புதுடில்லி:பங்கு விலை தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக, 'எல்.ஐ.சி.,' நாட்டின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நேற்று தேசிய பங்கு சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை, 6.47 சதவீதம் அதிகரித்து 1,112 ரூபாயாக இருந்தது. நடப்பாண்டில் இதுவரை இந்நிறுவனத்தின் பங்கு விலை, 33 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
எல்.ஐ.சி.,யின் சந்தை மதிப்பு நேற்று ஒரே நாளில் 39,000 கோடி ரூபாய் அதிகரித்து, 6.99 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இதன் வாயிலாக அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியை பின்னுக்குத் தள்ளி, எல்.ஐ.சி., ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிஉள்ளது.

